முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடைய இடுகை

மகளே!......

கண்ணாமூச்சி விளையாடினோம்........ கால்களை நீ கட்டிக்கொள்ள.... கண்டுபிடிக்க குனிந்து நிமிர்வதற்குள் கண்நிறைந்த உயரத்தில் நீ.... உன் சின்னக் கீழ்படியாமைகள்,சிலநேரம் என் மனதில் வாட்டத்தைத்தூவினாலும் அதன்பொருட்டு உன் வெற்றிகள்... என்னை ஊட்டமுறச்செய்கின்றன. உன் சிக்கனமின்மை பல நேரம் மனதில் அச்சத்தை விதைத்தாலும். அதன்பொருட்டு உன் சந்தோஷம் என்னை மெய்மறக்கச்செய்கிறது.. பேச்சும்,சிரிப்பும்,விளையாட்டு மாய்... எந்நேரமும் சிட்டுக்குருவியின் உற்சாகம். போகும்போதும்,வரும்போதும் உன் உரசல்களில் அந்த உற்சாகம் எனக்குள்ளும்..... முதுமையின்முதல் படியில் இயலாமையுடன் அடியெடுத்து வைக்க ஏனோ விருப்பமில்லை.. எனக்கு உற்சாகத்தோள் கொடுத்து.... இன்னும் கொஞ்சதூரம் உன் இளமையுடன் அழைத்துச்செல்வாயா?......மகளே!! .....

சமீபத்திய இடுகைகள்

போராட்டம்.

தீராவலி

hikoo

மௌனம் பூத்திருக்கும் உன் நினைவுகள்

என்ன செய்யப்போகிறோம்

அப்போதெல்லாம் அம்மாவிடமிருந்து

முத்துகள்