தீராவலி
ஊருக்குள்ளே பெரிய வீடு......
தாத்தாவிட்டுப்போன சொத்து..
பாகப்பிரிவினை வந்தபோது,
விட்டுக்கொடுக்க மனதில்லாமல்
விடுபட்டன உறவுகள்.........
ஒருபோர்வைக்குள்
வீடு கட்டிவிளையாடியபோது...அங்கே
அனைவருக்கும் இடமிருந்தது அப்போது...
அண்ணன் வீடு கட்டியிருக்கிறானாம் இப்போது.
சென்று காண ஆசைதான்-ஆனால்...
இன்று இடமிருக்குமா?
அவன் வீட்டிலும் மனதிலும்....
அக்காவின் உடைகளை அனுமதியின்றி
உரிமையோடு அனுபவித்த நாட்கள்...
அவள் மகனுக்கு கல்யாணமாம்....
அழைப்பிருக்குமாஎனக்கு?......
அன்று அண்ணன் அடித்ததும்.,
அக்காதிட்டியதும் வலிக்கவில்லை...
இன்று அவர்களின் பாராமுகம்
தீராவலியைத்தருகிறது.
தாத்தாவிட்டுப்போன சொத்து..
பாகப்பிரிவினை வந்தபோது,
விட்டுக்கொடுக்க மனதில்லாமல்
விடுபட்டன உறவுகள்.........
ஒருபோர்வைக்குள்
வீடு கட்டிவிளையாடியபோது...அங்கே
அனைவருக்கும் இடமிருந்தது அப்போது...
அண்ணன் வீடு கட்டியிருக்கிறானாம் இப்போது.
சென்று காண ஆசைதான்-ஆனால்...
இன்று இடமிருக்குமா?
அவன் வீட்டிலும் மனதிலும்....
அக்காவின் உடைகளை அனுமதியின்றி
உரிமையோடு அனுபவித்த நாட்கள்...
அவள் மகனுக்கு கல்யாணமாம்....
அழைப்பிருக்குமாஎனக்கு?......
அன்று அண்ணன் அடித்ததும்.,
அக்காதிட்டியதும் வலிக்கவில்லை...
இன்று அவர்களின் பாராமுகம்
தீராவலியைத்தருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக