போராட்டம்.

தூரத்திலிருந்தே பார்த்தாயிற்று-அய்யோ!

தப்பித்துவிடலாமா முடியாதே..

சந்திப்பு நிச்சயம் என்றுதெரியும்..

இவ்வளவு விரைவிலா??..

கடக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை.

மனம் ஒப்புக்கொள்ள மறுக்க

உடல் ஒத்துழைக்க நினைக்க

பிடியில் சிக்கினால் மெல்ல மெல்ல

சாகும்வரை ஆக்கிரமிப்பு தொடரும்.

தோல்விநிச்சயம்.

விதிப்படி நடக்கட்டும்..

மனம் மெல்ல ஆறும்.
.
.
.
.
.
.
.
.


முதுமையை சந்தித்த இளமையின் போராட்டம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்