என்ன செய்யப்போகிறோம்

பெண்ணியமும் பெண் சுதந்திரமும்
பேச மட்டும்தான்
வாய்க்கு அவல் போல மெல்லுவது
சுகம்தான்

இளைஞர்கள் கூட அழகாகப்பேசுகிறார்கள்
பெண்ணியம்--திருமணத்திற்கு முன்பு.

பெண்ணைக் கொண்டவனோ,பெற்றவனோ
பேசுவதில்லை--பேச முடியாது

கையில் கிடைத்த பொருளை
உடைத்து அனுபவிப்பது சுதந்திரமல்ல.

விடுதலை வேண்டுகிற அச்சாணியால்
வண்டி குடை சாய்ந்துவிடும்

சுதந்திரம் கோரும் பொக்கிஷங்கள்
களவாடப்பட்டுவிடும்

கூடு சுமையென நிராகரிக்கும் நத்தைகள்
கொத்தி செல்லப்படும்

விதிமுறைகளை மீறினால்
விபத்து நேரிடும்

கோடு தாண்டுவதுதான் சீதைகள்
சுதந்திரமென்றால்
ராவணன்களை குறை சொல்லி
பலனில்லை.

எதிர்மாறான ஒன்றை எதிர்நீச்சலிட்டுப் பெற்று
என்ன செய்யப்போகிறோம்

கருத்துகள்

  1. முற்றிலும் எனக்கு உடன்பாடில்லாக் கருத்து எனினும் ... கவி நடை அழகு ,,

    பதிலளிநீக்கு
  2. சமுகத்தை ஒட்டிய கருத்துக்கள். ஆண்களிடம் வரவேற்ப்பும், பெண்களிடம் எதிர்ப்பும் வரும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்