அப்போதெல்லாம் அம்மாவிடமிருந்து
அப்போதெல்லாம் அம்மாவிடமிருந்து
கடிதங்கள் வரும்....
முத்துக்கள் கோர்த்த கையெழுத்தில்
கவிதையாய் வார்த்திருப்பாள்...
நினைக்கும்போது எடுத்துப்பார்த்து
நெஞ்சோடணைத்து கடிதத்தை
முத்தமிட்டதருணங்கள்...
வாராவாரம் கடிதத்தை எதிர்பார்த்து
வாசலில் காத்திருப்பேன்...
உடம்பை கவனிச்சுக்கோ.....
எண்ணெய்தெய்ச்சுக் குளி..
பிள்ளைகளை அடிக்காதே..........
புருஷனிடம் சண்டை போடாதே....
எல்லாரையும் அனுசரிச்சுப்போ.... என்று..
இன்று??...........
தொலைபேசிக்குரலில்.. சொற்ப நேரத்தில்..
அப்புறம்?.....வேறென்ன?...வைக்க வா?..
பேசியதும் அத்துடன் மறந்துவிடுகிறது
வார்த்தைகள்.......கிணற்றிலிட்ட கல்லாய்.
கடிதங்கள் வரும்....
முத்துக்கள் கோர்த்த கையெழுத்தில்
கவிதையாய் வார்த்திருப்பாள்...
நினைக்கும்போது எடுத்துப்பார்த்து
நெஞ்சோடணைத்து கடிதத்தை
முத்தமிட்டதருணங்கள்...
வாராவாரம் கடிதத்தை எதிர்பார்த்து
வாசலில் காத்திருப்பேன்...
உடம்பை கவனிச்சுக்கோ.....
எண்ணெய்தெய்ச்சுக் குளி..
பிள்ளைகளை அடிக்காதே..........
புருஷனிடம் சண்டை போடாதே....
எல்லாரையும் அனுசரிச்சுப்போ.... என்று..
இன்று??...........
தொலைபேசிக்குரலில்.. சொற்ப நேரத்தில்..
அப்புறம்?.....வேறென்ன?...வைக்க
பேசியதும் அத்துடன் மறந்துவிடுகிறது
வார்த்தைகள்.......கிணற்றிலிட்ட
கருத்துகள்
கருத்துரையிடுக