இரவு 1 மணி. மழைமேகங்கள் திரண்டுவந்து நிலவை ஒளி தராமல் சிறை பிடித்து சென்றன.மழைவந்து நனைவதற்குள்
மாடியில் கொடியிலிருந்த துணிகளை எடுத்துவிடலாமென்று சென்றேன்.பக்கத்தில் 2 மாடிக் கட்டிடம் அது.மொட்டை மாடியில் யாரோ தலை சாய்த்து கையை தாடைக்கு முட்டு கொடுத்து உட்கார்ந்திருந்ததுபோல் தோன்றியது.யாராயிருக்கும்? என்னையே உற்று பார்ப்பதுபோல் இருக்கிறதே..திருடனா இருக்குமோ?திருடனா இருந்தா ஏன் அசையாம பார்த்துகிட்டே இருக்கணும்?ஐயோ கடவுளே! சமீபத்தில்தான் அந்த வீட்டில் அசம்பாவிதம் நடந்தது.நாக்கு உலர்ந்துவிட்டது.சத்தம் போடலாம்னா கீச்கீச்னுதான் சத்தம் வருதேயொழிய வார்த்தைகள் வரவில்லை.ஓடிடலாம்னு பார்த்தா கால்கள் அசையமறுக்கிறது.எப்படியோ காலைக் கையில் புடிச்சி பேர்த்தெடுத்து ஒரே ஓட்டம்.சும்மா பந்து மாதிரி படிகளில் குதித்து ஓடி வந்து பெட்ஷீட்டை தலையோடு போர்த்தி படுத்தவள்தான்.தூக்கமோ மயக்கமோ தெரியவில்லை. காலையில்என்னதான் விடிந்திருந்தாலும் பயம் மிச்சமிருந்தது.முதலில் போய் பார்க்கவேண்டும். போய் பார்த்தால்......
பார்த்தால்......
அங்கேயே.அப்படியே.......
.
.
.
.
.
.
.
டிஷ் ஆண்டனா.

கருத்துகள்
கருத்துரையிடுக